YouTurn

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானது பற்றி கருத்து கூறினாரா திருச்சி சிவா? உண்மை என்ன?

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானது பற்றி கருத்து கூறினாரா திருச்சி சிவா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து திருச்சி சிவா பேசியதாக அப்படியொரு செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்று தந்தி டிவி, மாலை முரசு செய்திகள் ஆகிய நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளது.

பரவிய செய்தி

பிளீஸ் ஃபேக்ட் செக் பண்ணி சொல்லுங்க

@tn_factcheck


நான் போஸ்ட் போடனும்



X Link

விரிவான விளக்கம்

கடந்த செப்டம்பர் 28 அன்று தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், ‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது அவசரகதியில் எடுத்த முடிவு. கட்சியில் பலருக்கு அதில் உடன்பாடில்லை’ என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியாதாக, மாலை முரசு செய்திகள், தந்தி டிவி ஆகிய செய்தித் நிறுவனங்கள் 22/12/24 தேதியில் News Card வெளியிட்டதாக சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.


https://x.com/i/web/status/1871026416244117713


உண்மை என்ன:


மாலை முரசு, தந்தி டிவி ஆகிய செய்தித் செய்தி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளில் இந்த News Card வெளியிடப்பட்டிருக்கிறதா? என்று தேடினோம். 


தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பக்கத்தில், ”இப்படி எந்த செய்தியையும் தந்தி டிவி வெளியிடவில்லை. பகிரவும் இல்லை. இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம்!” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


image.png


அதேபோல், மாலைமுரசு செய்திகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பக்கத்தில், ”இந்த செய்தியை மாலைமுரசு வெளியிடவில்லை” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


image.png


இதிலிருந்து, ‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து திமுகவில் பலருக்கு உடன்பாடில்லை’ என்று தந்தி டிவி, மாலைமுரசு ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டதாக பரப்பப்படும் News Card பொய்யாக உருவாக்கப்பட்டது என்பது  நிரூபணமாகிறது.


முடிவு:


தந்தி டிவி, மாலைமுரசு ஆகிய நிறுவனங்கள் ’உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து திமுகவில் பலருக்கு உடன்பாடில்லை’ என்று செய்தி வெளியிட்டதாக பரப்பப்படும் News Card பொய்யாக உருவாக்கப்பட்டது. தந்தி டிவி, மாலைமுரசு ஆகிய நிறுவனங்கள் அப்படியொரு செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்று விளக்கமளித்துள்ளனர். 



பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.